டிராக்டர் மோதி வாலிபர் பலி

காவேரிப்பாக்கம் அருகே டிராக்டர் மோதி வாலிபர் பலியானார்.
டிராக்டர் மோதி வாலிபர் பலி
Published on

காவேரிப்பாக்கம் சாரங்கபாணி நாயக்கர் தெருவில் வசித்து வரும் சீனிவாசன் என்பவரின் மகன் ஜெகன் (வயது 23). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டிலிருந்து உறவினர் ஊரான ஐயம்பேட்டை சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். கட்டளை என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த டிராக்டர் மோதியதில் தலையில் படுகாயமடைந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஜெகன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com