ரெயில் மோதி வாலிபர் பலி

பழனி அருகே ரெயில் மோதி வாலிபர் பலியானார்.
ரெயில் மோதி வாலிபர் பலி
Published on

பழனியை அடுத்த சிவகிரிப்பட்டி அருகே ரெயில் தண்டவாள பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக பழனி ரெயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி தலைமையிலான ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது தண்டவாளம் அருகே அடிபட்ட நிலையில் வாலிபர் இறந்து கிடந்தார்.

விசாரணையில் இறந்து கிடந்தவர் சிவகிரிப்பட்டியை சேர்ந்த பாண்டியன் மகன் அரவிந்த் (வயது 20) என்பதும், தண்டவாளத்தை கடந்தபோது, கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இறந்தார் என தெரியவந்தது. பின்னர் அரவிந்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com