ரெயில் மோதி வாலிபர் பலி

திருப்பத்தூர் அருகே ரெயில் மோதி வாலிபர் பலியானார்.
ரெயில் மோதி வாலிபர் பலி
Published on

திருப்பத்தூர்- காக்கங்கரை ரெயில் நிலையங்களுக்கு இடையே புதுப்பேட்டை ரோடு ரெயில்வே மேம்பாலம் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் அந்த வழியாக சென்ற ஏதோ ஒரு ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com