வாகனம் மோதி வாலிபர் பலி

சாணார்பட்டி அருகே, வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
வாகனம் மோதி வாலிபர் பலி
Published on

சாணார்பட்டி அருகே உள்ள ஜே.மணியக்காரன்பட்டியை சேர்ந்தவர் பொன்னர் (வயது 30). லாரி டிரைவர். நேற்று காலை இவர், அதிகாரிப்பட்டி-வி.எஸ்.கோட்டை சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று, அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பொன்னர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பொன்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவ இடத்தின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com