வாகனம் மோதி வாலிபர் பலி

சோளிங்கர் அருகே வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
வாகனம் மோதி வாலிபர் பலி
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் முதூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 23). இவர் சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் சோளிங்கரில் இருந்து முதூருக்கு மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். தாளிக்கால் பகுதியில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவலறிந்த சோளிங்கர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com