உளுந்தூர்பேட்டையில்வாகனம் மோதி வாலிபர் பலி

உளுந்தூர்பேட்டையில் வாகனம் மோதி வாலிபர் பலியானார்,
உளுந்தூர்பேட்டையில்வாகனம் மோதி வாலிபர் பலி
Published on

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை கீரனூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் மணிராஜ் ( வயது 19). இவர் நேற்று முன்தினம் இரவு, உளுந்தூர்பேட்டை புறவழி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சுங்கச்சாவடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்குள்ள, தனியார் பால் பண்ணை அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மணிராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த மணிராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மணிராஜ் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com