மதுராந்தகம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலி

மதுராந்தகம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
மதுராந்தகம் அருகே வாகனம் மோதி வாலிபர் பலி
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பாக்கம் என்ற இடத்தில் சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற வாகனம் மோதி 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இது குறித்து பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபால் மதுராந்தகம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஜின்னா பாஷா அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். விபத்தில் பலியான நபர் எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகிறார். அவர் நீல நிற பேண்ட் அணிந்து இருந்தார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com