பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தகட்டூர் பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.
பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
Published on

வாய்மேடு:

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் பைரவர் கோவில் உள்ளது. வடக்கே காசியிலும் தெற்கே தகட்டூரில் மட்டுமே பைரவர் மூலவராக அருள் பாலிக்கும் தலங்கள் உள்ளன. பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் தை மாத தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. இதையொட்டி பைரவருக்கு பால், இளநீர், நெய், தேன், திரவியம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com