சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.
சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
Published on

நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் புன்னம் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களிலும் காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com