சென்னையில் 2வது நாளாக 100 டிகிரியை கடந்த வெப்பநிலை

சென்னையில் 2வது நாளாக இன்று 100 டிகிரியை கடந்து வெப்பநிலை பதிவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னையில் 2வது நாளாக 100 டிகிரியை கடந்த வெப்பநிலை
Published on

சென்னை,

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இந்த அக்னி நட்சத்திரம் வருகிற 28-ந்தேதி நிறைவடைகிறது. கத்திரி வெயிலால் சென்னை, மதுரை, கடலூர், நாகை, சேலம், தஞ்சை, திருச்சி, திருத்தணி, தூத்துக்குடி, வேலூர் ஆகிய 10 நகரங்களில் நேற்று வெயில் 100 டிகிரியை (பாரன்ஹீட் அளவு) கடந்தது.

இவற்றில் அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கம் 106.34 டிகிரி மற்றும் சென்னை விமான நிலையம் 106.52 டிகிரி என வெப்பநிலை பதிவானது.

இதேபோன்று அம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்ததால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புயலால் சென்னையில் நேற்று வெப்பநிலை 100 டிகிரியை கடந்தது. தொடர்ந்து 2வது நாளாக இன்றும் சென்னையில் வெப்பநிலை 100 டிகிரியை கடந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று 107.24 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com