தொம்பரகாம்பட்டியில்வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா

தொம்பரகாம்பட்டியில்வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா
Published on

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே தொம்பரகாம்பட்டியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜை, வாஸ்து பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. 8-ந் தேதி தீர்த்தகுடம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் வீர ஆஞ்சநேயர் கோவில் கோபுர கலசங்கள் மற்றும் மூலவர் தெய்வங்களுக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை அர்ச்சகர்கள் நடத்தினர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார சேவை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com