தேய்பிறை அஷ்டமியையொட்டிகாலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தேய்பிறை அஷ்டமியையொட்டிகாலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தேய்பிறை அஷ்டமி

கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டன. இதையடுத்து கால பைரவர் உற்சவம், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன.

இதில் ஏராளமான பெண்கள் பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

தட்சிணகாசி காலபைரவர்

இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன்குட்டையில் உள்ள தட்சிணகாசி காலபைரவர் கோவில் மற்றும் கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com