ஆடி மாத பிரதோஷத்தையொட்டிசிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

ஆடி மாத பிரதோஷத்தையொட்டிசிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
Published on

ஆடி மாத பிரதோஷத்தையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மல்லிகார்ஜூனசாமி கோவில்

தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று ஆடி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்தி மற்றும் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூன சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி முதலில் நந்திக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் உபகார பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது

மருதவாணேஸ்வரர் கோவில்

இதேபோன்று தர்மபுரி நெசவாளர் நகரில் உள்ள மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் ஆடி மாத பிரதோஷத்தையொட்டி நந்தி மற்றும் மகாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்ற சனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் தர்மபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவாணேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சாலையில் உள்ள சித்திலிங்கேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் சமேத அருளீஸ்வரர் கோவில், அன்னசாகரம் சோமேஸ்வரர் கோவில், சவுலுப்பட்டி ஆதி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட தர்மபுரி நகரை சுற்றியுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் ஆடி மாத பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதேபோன்று மாவட்டத்தின் முக்கிய கோவில்களான தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

--

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com