கீரம்பூர் அருகேசாய்பாபா கோவிலில் வருடாபிஷேக விழா

கீரம்பூர் அருகேசாய்பாபா கோவிலில் வருடாபிஷேக விழா
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே தொட்டிப்பட்டியில் உள்ள சாய்பாபா கோவிலில் 9-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு மேல் சாய்பாபாவிற்கு சிறப்பு ஆரத்தியும், 5 மணிக்கு கலசங்களுடன் யாக பூஜையும், 6 மணிக்கு யாகசாலையில் இருந்து கலசங்களுடன் புறப்பட்டு கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் கலசாபிஷேகம் செய்தனர்.

பின்னர் காலை 7 மணிக்கு சர்வசித்தி தனாகர்சன சங்கல்ப பூஜையும், 8 மணிக்கு கூட்டு பிரார்த்தனை நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தொட்டிப்பட்டி சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com