கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் அருகேமரத்தில் ஏறி தியானம் செய்த வாலிபரால் பரபரப்பு

கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவில் அருகேமரத்தில் ஏறி தியானம் செய்த வாலிபரால் பரபரப்பு
Published on

சேந்தமங்கலம்:

கொல்லிமலை ஒன்றியம் வலப்பூர் நாட்டில் உள்ள அரப்பளீஸ்வரர் கோவில் பகுதியில் சிற்றருவி மற்றும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிகளின் நீரோட்ட பாதை செல்கிறது. இதனால் அப்பகுதியில் துறவிகள், தியானம் செய்வோர் அங்கு வந்து தியானம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அரப்பளீஸ்வரர் கோவில் அருகே உள்ள 70 அடி உயர சில்வர் ஒக் மரத்தில் 22 வயது வாலிபர் ஏறி தியானம் செய்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் வாலிபரை கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால் வாலிபர் வராததால் கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் எச்சரிக்கை செய்ததன் பேரில் வாலிபர் மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். இதனை தொடர்ந்து அந்த வாலிபர் அரப்பளீஸ்வரர் கோவில் ஆற்றுக்கு சென்று தண்ணீரில் அமர்ந்து தியானம் செய்தார். மேலும் அந்த வாலிபர் வாய் பேச முடியாதவர் என கூறப்படுகிறது. எனினும் வாலிபர் எந்த ஊர்? எதற்காக இங்கு வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்ப ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com