தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு பைரவாஷ்டமி விழா

தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு பைரவாஷ்டமி விழா
தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு பைரவாஷ்டமி விழா
Published on

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு சுந்தரவல்லி அம்பிகா சமேத சுயம்பு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு கால பைரவாஷ்டமி விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு ஸ்ரீ விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்யம், காலபைரவர் மூலமந்திர ஹோமம் மற்றும் பூர்ணாகுதி நடைபெற்றது. காலை 8 மணிக்கு காலபைரவருக்கு விசேஷ அபிஷேகம், கலசாபிஷேகம், தீபாராதனை மற்றும் லட்சார்ச்சனை தொடங்கியது. மாலை 6.30 மணிக்கு லட்சார்சனை நிறைவும், ஷோடச உபசாரம், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பாக அலங்காரமும், மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதேபோல் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதி சிவன் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகர் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com