பள்ளிபாளையம் அருகேகொங்கு திருப்பதி கோவில் பூட்டி `சீல்' வைப்பு

பள்ளிபாளையம் அருகேகொங்கு திருப்பதி கோவில் பூட்டி `சீல்' வைப்பு
Published on

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே தாஜ்நகர் பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் கொங்கு திருப்பதி கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். பார்த்தசாரதி என்பவர் அர்ச்சகராக இருந்து கோவில் பணியை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தசாரதிக்கும், சிலருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பினரும் பள்ளிபாளையம் போலீசில் புகார் கொடுத்தனர்.

இதற்கிடையே அர்ச்சகர் பார்த்தசாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு முடிவில் கோவில் இடம் ஈரோடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமானது என்றும், கோவிலை பூட்டி `சீல்' வைக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ஈரோடு வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் மற்றும் அதிகாரிகள் நேற்று கோவிலை பூட்டி `சீல்' வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com