மச்சபுரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை

மச்சபுரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
மச்சபுரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை
Published on

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கோவில் தேவராயன் பேட்டை மச்சபுரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் உலக அமைதிக்காகவும், செல்வம் பெருகவும், நோய்நொடி நீங்கவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. முன்னதாக சாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். இதில் கோவில் செயல் அலுவலர் ஹாசினி, மேலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com