வரசித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு

வரசித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது.
வரசித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு
Published on

திருப்பனந்தாள் அருகே மகாராஜபுரத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது. இதை முன்னிட்டு யாக சாலை பூஜைகள் நடந்தன. 2-ம் கால யாகசாலை பூஜை நிறைவாக, மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு நடந்தது. பின்னர் கோவில் விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com