ராயக்கோட்டை அருகேஅம்மன் கோவில் திருவிழாபக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்

ராயக்கோட்டை அருகேஅம்மன் கோவில் திருவிழாபக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்
Published on

ராயக்கோட்டை 

ராயக்கோட்டை அருகே உள்ள தோட்டம் பகுதியில் சாதேவனஅள்ளி மாரியம்மன், சல்லாபுரியம்மன் கோவில் திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நேற்று காலை பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து தீ மிதி விழா நடந்தது. சோமநாதேஸ்வரர் கோவில் பூசாரி விவேகானந்தன் தலைமையில் குருக்கள் வேத மந்திரங்கள் ஓதி பூஜை செய்தனர். முதலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு குண்டத்தில் எடுத்து வந்தனர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி காவடியாட்டம், கரகாட்டம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை அம்மன்கள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com