ஞான சித்தர் வெங்கிடுசுப்பையா சுவாமிகள் 150-வது ஆண்டு குருபூஜை விழா

ஞான சித்தர் வெங்கிடுசுப்பையா சுவாமிகள் 150-வது ஆண்டு குருபூஜை விழா நடந்தது.
ஞான சித்தர் வெங்கிடுசுப்பையா சுவாமிகள் 150-வது ஆண்டு குருபூஜை விழா
Published on

பட்டுக்கோட்டை பெரியகடைத்தெரு மேல் பாகத்தில் ஞான சித்தர் வெங்கிடுசுப்பையா சுவாமிகள் ஆலயம் உள்ளது. சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்து 150 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி 4 நாட்கள் குருபூஜை விழா நடைபெற்றது. விழாவை மானாமதுரை மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி சுவாமிஜி, மாதாஜி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். நாவலாசிரியர் இந்திரா சவுந்தர்ராஜன் சித்தர்களின் பெருமை என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகளும், ராமலிங்க சுவாமி அடியார்கள் அகவல் பாராயணமும் நடந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெங்கிடுசுப்பையா சுவாமிகள் உருவப்படம் புஷ்ப பல்லக்கில் வீதியுலா வரும் நிகழ்ச்சி பஜனையுடன் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அன்னதான கமிட்டியினர் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com