மாரியம்மன் கோவில் விழா

சாமிசெட்டிப்பட்டியில் மாரியம்மன் கோவில் விழா நடைபெற்றது.
மாரியம்மன் கோவில் விழா
Published on

நல்லம்பள்ளி

நல்லம்பள்ளி அருகே சாமிசெட்டிப்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. விழாவையொட்டி பக்தர்கள் கூழ் குடம் எடுத்து வந்து பெரிய கொப்பரையில் ஏற்றி அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். தொடர்ந்து இரவு அர்ஜூனன் தபசு நாடகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) ஊர் முனியப்பனுக்கு சிறப்பு பூஜையும், நாளை (வெள்ளிக்கிழமை) சக்தி கரகம் அழைத்தல், மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை பக்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com