

கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடையில், முனீஸ்வரர் கோவில் திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தன. பின்னர் கோவில் முன்பு 35 ஆடுகளை பலியிட்டனர். மேலும் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டனர்.
ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை கொண்டு கோவில் அருகில் சமைத்து, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கறி விருந்து படைத்தனர். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கறி விருந்தில் கலந்து கொண்டனர். இதில் மகராஜகடை மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர்.