108 திருவிளக்கு பூஜை

வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
108 திருவிளக்கு பூஜை
Published on

வலங்கைமான்;

வலங்கைமானில் பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடக்கும் பாடைக்காவடி விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். வலங்கமான் மகாமாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளிக் கிழமையையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் வலங்கைமான் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து குத்துவிளக்கேற்றி வழிபாடு நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரமேஷ், ஆய்வாளர் தமிழ் மணி, நிர்வாக மேலாளர் சீனிவாசன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com