எம்ஜிஆர், ஜெயலலிதா கோவிலை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

அமைச்சர் உதயகுமார் ஏற்பாட்டில் கட்டப்பட்டுள்ள, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கான கோவில் திறக்கப்பட்டுள்ளது.
எம்ஜிஆர், ஜெயலலிதா கோவிலை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
Published on: 

மதுரை,

தமிழக வருவாய்த்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் ஜெயலலிதா பேரவை மற்றும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் மதுரை திருமங்கலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூரில் சுமார் 12 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆருக்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலையும் சுமார் 400 கிலோ எடையில் முழு உருவ வெண்கல சிலையாக நிறுவப்பட்டு உள்ளன. இந்த கோவில் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த கோவிலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று காலை திறந்து வைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com