சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற கோவில் அர்ச்சகர் போக்சோவில் கைது

சுவாமிமலை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற கோவில் அர்ச்சகர், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற கோவில் அர்ச்சகர் போக்சோவில் கைது
Published on

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே திருவலஞ்சுழியில் வெள்ளப் பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடமுழுக்கு நடந்தது. அதனை தொடர்ந்து இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த கோவிலில் அர்ச்சகராக இருப்பவர் திருவலஞ்சுழியை சேர்ந்த விஸ்வநாதன் (75 வயது). சம்பவத்தன்று இந்த கோவிலுக்கு ஒரு குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்ய வந்தபோது அவர்கள் சாமி சன்னதியில் ஒரு பையை மறந்து வைத்து விட்டு சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த பையை எடுத்து வருவதாக அந்த குடும்பத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது தந்தையிடம் கூறிவிட்டு கோவிலுக்குள் சென்றுள்ளார்.

பையை எடுக்க சென்ற சிறுமிக்கு, கோவில் அர்ச்சகர் விஸ்வநாதன் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். இதனால் அந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு அந்த சிறுமியின் பெற்றோர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த சிறுமி கோவில் அர்ச்சகர் விஸ்வநாதன் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமியின் தந்தை கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவில் அர்ச்சகர் விஸ்வநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற வழக்கில் அர்ச்சகர், போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com