ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ.95 கோடி மதிப்பிலான கோவில் சொத்துகள் மீட்பு: அறநிலையத்துறை தகவல்

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ.95 கோடி மதிப்பிலான கோவில் சொத்துகள் மீட்பு: அறநிலையத்துறை தகவல்
Published on

தமிழகத்தில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து தற்போது மீட்கப்பட்டுள்ள கோவில் சொத்துக்கள் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசாமி கோவில், சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் மற்றும் திருப்பூர் மாவட்டம், மணக்கடவு காட்டம்மன் ஆகிய 3 கோவில்களுக்கு சொந்தமான ரூ.95 கோடி மதிப்பிலான சொத்துகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு, கோவில்கள் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com