சேலத்தில் ஏலியனுக்கு கோவில்

ஏலியன் கோவிலுக்கு தினமும் பக்தர்களும் வந்து செல்வதாக கூறப்படுகிறது.
சேலத்தில் ஏலியனுக்கு கோவில்
Published on

சேலம்,

உலகம் நவீன வளர்ச்சிகள் பல அடைந்து வரும் நிலையில், மக்களின் வழிபாட்டு முறையும் அதற்கு ஏற்றார் போல மாறி வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர்  வேற்று கிரகவாசிகள் என அழைக்கப்படும் ஏலியனுக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார்.

ஏலியன் சித்தர், கைலாய சிவன் கோவில் என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு தினமும் பக்தர்களும் வந்து செல்கின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்த கோவிலை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை எங்கும் ஏலியன் சித்தர் இல்லை என்றும் இங்குதான் உள்ளது என லோகநாதன் தெரிவித்துள்ளார். தற்போது கோவிலில் திருப்பணி நடைபெற்று வருவதால் குறைந்த அளவு பூஜை நடைபெறுவதாகவும், கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அனைத்து வித பூஜைகளும் செய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஏலியன் இருப்பது உண்மையா? அல்லது திரைப்படங்களில் மட்டுமே காட்டப்படும் கற்பனையா என விவாதங்கள் பல நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏலியனை தெய்வமாக நினைத்து, ஏலியனுக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தி வரும் சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com