கோவில் உண்டியல் பணம் தேவாலயம், மசூதி கட்ட செலவிடப்படுகிறதா? தமிழ்நாடு அரசு விளக்கம்

கோவில்கள் மூலம் கிடைக்கும் வருவாய் கோவில்களுக்குதான் செலவிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் உண்டியல் பணம் தேவாலயம், மசூதி கட்ட செலவிடப்படுகிறதா? தமிழ்நாடு அரசு விளக்கம்
Published on

சென்னை,

ரூ.445 கோடி கோவில் உண்டியல் பணத்தை தேவாலயம், மசூதி கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு செலவழித்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி புகைப்படத்துடன் தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்து இருக்கிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் 'எக்ஸ்' தளப்பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

இது முற்றிலும் பொய்யான தகவல். பதிவிட்டவர் பகிர்ந்த நாளிதழின் புகைப்படத்தில் இடம்பெற்ற செய்திக்கும், தமிழ்நாட்டிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கர்நாடகாவில் உள்ள கோவில்களின் உண்டியலில் வசூலான நிதி தொடர்பாகவே அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு என்று திரித்து வதந்தி பரப்பி வருகிறார்கள்.தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் மூலம் கிடைக்கும் வருவாயைக் கோவில்களுக்கும், இந்து சமயம் சார்ந்த விவகாரங்களுக்காக மட்டுமே அரசு செலவு செய்கிறது. வதந்தியைப் பரப்பாதீர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com