ஆலயங்கள் வழிபாட்டுத் தலங்கள் தான் வர்த்தக மையங்கள் அல்ல! - எச்.ராஜா

ஆலயங்கள் அனைத்திலும் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் என எச்.ராஜா தெரிவித்தார்.
எச்.ராஜா
Published on

சென்னை,

தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

ஆலயங்கள் வழிபாட்டுத் தலங்கள் தான் வர்த்தக மையங்கள் அல்ல..!!

கண்டனம்

வழிபாட்டுத் தலங்களை வர்த்தக மையங்களாக மாற்றுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பக்தர்களிடம் பணம் பறிப்பதற்குப் பெயர் சேவைக் கட்டணமா?

இஸ்லாமியர்கள் மெக்கா, மதினா செல்ல மானியம் வழங்கும் தமிழக அரசு..!! கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்ல மானியம் வழங்கும் தமிழக அரசு..!!

இந்துக்கள் சொந்த மண்ணிலேயே ஆலய வழிபாடு செய்ய கட்டணம் வசூலிப்பது இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா?

ரத்து செய்ய வேண்டும்

மதசார்பற்ற சமூகநீதியே எங்கள் ஆட்சியின் கொள்கை என முழங்கி வரும் தவெக அரசு ஆலயங்களில் தரிசன கட்டணக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்கள் அனைத்திலும் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com