

கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தற்காலிக பணியாளர்கள் நியமனத்துக்கான விண்ணப்பங்கள் வாங்க, இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது.
500 தற்காலிக பணியாளர்கள் காலியிடங்களுக்காக, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டது. இதனை வாங்க ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களும், இளம்பெண்களும் ஒரே நேரத்தில் வந்திருந்தனர். சமூக இடைவெளியின்றி வரிசையில் நின்று அவர்கள் விண்ணப்பங்களை வாங்கிய நிலையில், கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.