போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு தற்காலிக அரசுப் பணி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கண்ணகி நகரில் போதை மீட்பு மறுவாழ்வு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு தற்காலிக அரசுப் பணி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Published on

சென்னை,

சென்னை கண்ணகி நகரில் அமைக்கப்பட்டுள்ள போதை மீட்பு மறுவாழ்வு முகாமை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதற்கான முறையாக சிகிச்சைகளைப் பெற்று போதைப் பழக்கத்தில் இருந்து மீள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு தற்காலிக அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com