

சென்னை,
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஜுனைத் அகமது என்பவர் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் கட்சியில் இருந்து ஜுனைத் அகமது நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக பிரமுகர் ஜுனைத் அகமது கைது செய்யப்பட்ட நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.