புதுஆற்றுப்பாலம் பகுதியில் தற்காலிக ரவுண்டானா

புதுஆற்றுப்பாலம் பகுதியில் தற்காலிக ரவுண்டானா
புதுஆற்றுப்பாலம் பகுதியில் தற்காலிக ரவுண்டானா
Published on

தஞ்சை காந்திஜி சாலை புதுஆற்றுப்பாலம் அருகே காந்திஜி சாலை-நீதிமன்ற சாலை சந்திப்பில் கடந்து செல்லும் போது வாகன டிரைவர்களிடையே குழப்பம் நிலவி வந்தது. இதனால் அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்து வந்ததால், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து, ஏற்கெனவே நீதிமன்ற சாலை நுழைவு பகுதியில் இடது புறம் இருந்த ரவுண்டானா முழுவதுமாகவும், வலது புறம் நினைவுத் தூணுடன் கூடிய ரவுண்டானாவில் ஒரு பகுதியும் இடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் புதிதாக தற்காலிக ரவுண்டானா நேற்றுமாலை அமைக்கப்பட்டது. இந்த தற்காலிக ரவுண்டானா சில நாட்களுக்கு தொடரும் எனவும், இதில் உள்ள நிறை, குறைகளை அறிந்து நிரந்தரமான ரவுண்டானா அமைக்கப்படும் என போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com