நாமக்கல்லில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி தற்காலிக நிறுத்தம்

நாமக்கல்லில் இருந்து வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், தமிழகம் மற்றும் கேரளாவிற்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக முட்டையின் கொள்முதல் விலை அதிகரித்து வருவதால், பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளனர்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 480 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் துருக்கியில் முட்டை விலை இதைவிட ஒரு ரூபாய் குறைவாக உள்ளதால் உலக சந்தையில் பெரும்பாலான நாடுகளுக்கு துருக்கியில் இருந்து முட்டை ஏற்றுமதி செய்யப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com