ராசிபுரத்தில்ரூ.28 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ராசிபுரத்தில்ரூ.28 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
Published on

ராசிபுரம்:

ராசிபுரத்தில் நடந்த ஏலத்தில் ரூ.28 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

பருத்தி ஏலம்

ராசிபுரம் அருகே ஆர்.கவுண்டம்பாளையம் பவர்ஹவுஸ் பின்புறம் உள்ள ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. முத்துக்காளிப்பட்டி, புதுச்சத்திரம், மசக்காளிப்பட்டி, குட்டலாடம்பட்டி, சந்திரசேகரபுரம், முருங்கப்பட்டி, கவுண்டம்பாளையம், அணைப்பாளையம், வடுகம், குள்ளப்பநாயக்கனூர், சிங்களாந்தபுரம், தேங்கல்பாளையம், கரடியானூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

ராசிபுரம், ஆத்தூர், ஈரோடு, சேலம், பெருந்துறை, திருப்பூர், திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து பருத்தியை ஏலம் எடுத்தனர். ஆர்.சி.எச். ரக பருத்தி 897 மூட்டைகளும், சுரபி ரக பருத்தி 280 மூட்டைகளும், கொட்டு ரக பருத்தி 20 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டு இருந்தன.

கொட்டு ரகம்

இதில் ஆர்.சி.எச். பருத்தி குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரத்து 6,699 முதல் அதிகபட்சமாக ரூ.7 ஆயிரத்து 609-க்கும், சுரபி ரக பருத்தி குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரத்து 366-க்கும், அதிகபட்சமாக குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 849-க்கும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரத்து 100 முதல் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது.

மொத்தம் 1,197 பருத்தி மூட்டைகள் ரூ.28 லட்சத்திற்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com