அக்கரைப்பட்டியில்ரூ.16 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அக்கரைப்பட்டியில்ரூ.16 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
Published on

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் அருகே அக்கரைப்பட்டியில் தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. அளவாய்பட்டி, நடுப்பட்டி, செம்மாண்டப்பட்டி, மாமுண்டி, பாலமேடு, நாச்சிப்பட்டி, சப்பையாபுரம், கல்கட்டானூர், மதியம்பட்டி, வெண்ணந்தூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

ஆத்தூர், ஈரோடு, சேலம், பெருந்துறை, திருப்பூர், திருச்செங்கோடு, மகுடஞ்சாவடி கொங்கணாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து பருத்தியை ஏலத்தில் எடுத்தனர். மொத்தம் 590 சுரபி ரக பருத்தி ரூ.16 லட்சத்திற்கு பருத்தி விற்பனை ஆனது. இதில் பருத்தி குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.7,447 முதல் அதிகபட்சமாக ரூ.9,510 வரை ஏலம் போனது. கடந்த வாரங்களை விட பருத்தி விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com