பரமத்திவேலூரில்ரூ.6 லட்சத்து 94 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

பரமத்திவேலூரில்ரூ.6 லட்சத்து 94 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
Published on

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த ஏலத்திற்கு 10 ஆயிரத்து 149 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.77.19-க்கும், குறைந்தபட்சமாக ரூ.55.09-க்கும், சராசரியாக ரூ.75.65-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 94 ஆயிரத்து 368-க்கு தேங்காய் பருப்பு விற்பனை ஆனதாக தெரிவிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com