சென்னை-செய்யாறு இடையே 4 வழிச்சாலை அமைக்கும் டெண்டர் ரத்து

4 வழி நெடுஞ்சாலை அமைக்க கடந்த 10.3.2026 அன்று டெண்டர் விடப்பட்டது.
சென்னை-செய்யாறு இடையே 4 வழிச்சாலை அமைக்கும் டெண்டர் ரத்து
Published on

சென்னை,

சென்னையுடன் செய்யாறு தொழில் வழித்தட பகுதியை இணைக்கும் வகையில், 43 கி.மீ.க்கு 4 வழிச்சாலை அமைக்க தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

புலிவாயலில் இருந்து மனமதி இடையே 15.30 கி.மீ. நீளமுள்ள 4 வழி நெடுஞ்சாலை 2 பக்க சர்வீஸ் சாலையுடன் அமைக்கவும், பழவேரில் இருந்து புலிவாய்க்கு 13.40 கி.மீ. நீளமுள்ள 4 வழி நெடுஞ்சாலை அமைக்கவும், வளையகரணையில் இருந்து பழவேரிக்கு 14.50 கி.மீ. நீளமுள்ள 4 வழி நெடுஞ்சாலை அமைக்கவும் கடந்த 10.3.2026 அன்று டெண்டர் விடப்பட்டது.

செய்யூர் 'சிப்காட்'டுக்காக முன்மொழியப்பட்ட தொழில் வழிச்சாலையின் ஒரு பகுதியாக இந்த சாலைகள் அமைக்கப் படும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் நிர்வாக காரணங்களுக்காக இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையகம் பிறப்பித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com