தென்காசி: ஆலங்குளம் தொகுதியில் ஹரி நாடார் வேட்புமனு நிராகரிப்பு

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ஹரி நாடாரும், ராக்கெட் ராஜாவும் இணைந்து தேர்தலை சந்தித்தனர்.
தென்காசி: ஆலங்குளம் தொகுதியில் ஹரி நாடார் வேட்புமனு நிராகரிப்பு
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ஹரி நாடாரும், ராக்கெட் ராஜாவும் இணைந்து தேர்தலை சந்தித்தனர். அப்போது பனங்காட்டு படை கட்சி சார்பில் ஹரி நாடார் களம் இறங்கி இருந்தார். ஆனால் அதற்கடுத்த சில ஆண்டுகளில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு. இதையடுத்து ஹரி நாடார் கடந்த 2024 ஆம் ஆண்டு சத்திரிய சான்றோர் படை என்ற கட்சியை ஆரம்பித்தார்.

தற்போது ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஹரி நாடார். இருந்த போதிலும் அவர் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுவதற்காக சிறையில் இருந்தபடியே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். வேட்புமனுவில் 11.6 கிலோ தங்கம், 6 கார்கள் ரூ.12 லட்சம் சொத்து இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹரி நாடார் சிறையில் இருந்து முகவர் மூலம் வேட்புமனு தாக்கல் செய்தது செல்லாது என தேர்தல் நடத்தும் அலுவர் தெரிவித்து நிராகரித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com