மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை

நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும்.
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மறுநாள் மின்தடை
பராமரிப்பு பணிகள்
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் சங்கரன்கோவில் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து கடையநல்லூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பா.கற்பக விநாயக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை

விஸ்வநாதபேரி துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் கீழ்க்கண்ட இடங்களில் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்சாரம் இருக்காது.

மின்தடை படும் இடங்கள்

சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிக்குளம், மேல கரிசல்குளம், ராயகிரி, கொத்தாடைப்பட்டி, சொக்கநாதன்புத்தூர், மேலூர் துரைச்சாமிபுரம் மற்றும் வடுகப்பட்டி.

சங்கரன்கோவில் கோட்டம்

இதேபோல், சங்கரன்கோவில் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய உபமின் நிலையங்களில் வரும் நாளை மறுநாள் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற உள்ளது. இதனால் கீழ்க்கண்ட கிராமங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.

மின்தடை படும் இடங்கள்

மலையாங்குளம் உபமின் நிலையம்

மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி.கலிங்கப்பட்டி உபமின் நிலையம்: கலிங்கப்பட்டி, சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், செள்ளிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம் மற்றும் ரெங்கசமுத்திரம்.

திருவேங்கடம் உபமின் நிலையம்

திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கம்பட்டி, மகாதேவர்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையார்புரம் மற்றும் குண்டம்பட்டி.

நக்கலமுத்தன்பட்டி உபமின் நிலையம்

நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம், அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி மற்றும் மைப்பாறை.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com