தென்பெண்ணையாற்று தரைப்பாலம் மூழ்கியது

திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்று தரைப்பாலம் மூழ்கியது போக்குவரத்து துண்டிப்பு
தென்பெண்ணையாற்று தரைப்பாலம் மூழ்கியது
Published on

திருக்கோவிலூர்

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல் தென்பெண்ணையாற்றிலும் தற்போது மழை நீர் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் சாத்தனூர் அணை அதன் கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் தென்பெண்ணையாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே ஓடுகின்ற மழை நீருடன், அணை தண்ணீரும் இரண்டற கலந்து வருவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருக்கோவிலூர் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் மற்றும் அரகண்டநல்லூர் போலீசார் பாலத்தின் இருபுறத்திலும் தடுப்பு வேலிகள் அமைத்து பொதுமக்கள் யாரும் கடந்து செல்ல முடியாத வகையில் பாதுகாப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com