ராசிபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 4 இளைஞர்கள் படுகாயம்!

வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதும் இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
மோதிய இரு சக்கர வாகனங்கள்
Published on

நாமக்கல்,

ராசிபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 4 இளைஞர்கள் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாகனங்கள் மோதி விபத்து

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சாலையில் உள்ள ஏடிஎம் சிட்டி பகுதியில் ஆசிக் என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென சாலையை கடக்க முயன்றார். இதனிடையெ அந்த சாலை வழியே அதிவேகமாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் ஆசிக்கின் வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆசிக்கும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த அன்புச்செல்வன், கார்த்தி மற்றும் தீபேஸ் ஆகிய 4 இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தை நேரில் கண்ட பொதுமக்கள் காயமடைந்த 4 பேரையும் மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த ராசிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்து அதிவேகம் காரணமாக நடந்ததா இல்லையெனில் கவனக்குறைவு காரணமாக நடந்ததா என்று இளைஞர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com