விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து – எடப்பாடி பழனிசாமி இரங்கல்

பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை திமுக அரசு என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து – எடப்பாடி பழனிசாமி இரங்கல்
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் கட்டனர்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அதில் தெரிவித்திருப்பதாவது:-

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்கதையாகிவிட்டன. இதுகுறித்து நானும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை மு.க.ஸ்டாலினின் திமுக அரசு. மாறாக, பட்டாசு ஆலை என்ற பெயரில் ஒரு பளபளக்கும் அறையில் போட்டோஷூட் மட்டுமே எடுத்தார்.

இன்னும் சில நாட்களில் அமையவுள்ள அதிமுக அரசு இப்படியெல்லாம் ஏமாற்றாமல், பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்ள விழைகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com