விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - ஒருவர் பலி


விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - ஒருவர் பலி
x
தினத்தந்தி 5 Feb 2025 10:50 AM (Updated: 5 Feb 2025 12:08 PM)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே கோவில் புலிக்குத்தி பகுதியில் மோகன் ராஜ் என்பவரின் பட்டாசு ஆலை ஒன்று இயங்கிவந்தது. இன்று தொழிலாளர்கள் பலர் அங்கு வேலை செய்து வந்தனர். இந்நிலையில் இன்று மதியம் அந்த பட்டாசு ஆலையில் உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தானது அடுத்தடுத்த அறைகளில் இருக்கும் பட்டாசுகளில் தீ ஏற்பட்டு வேகமாக பரவத்தொடங்கியது.

இந்த விபத்தால் பட்டாசு ஆலையில் உள்ள தொழிலாளர்கள் 40க்கும் மேற்பட்டோர் அவசர அவசரமாக வெளியேறினர்.. மேலும் சிலர் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வெடிவிபத்தால் 5 பேர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். மேலும் பட்டாசு ஆலை பெரும் சேதம் அடைந்துள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டாசு ஆலைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் எந்திரங்கள் மூலம் மீட்புப் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story