

அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சாலையில் திறந்தவெளி பிளாஸ்டிக் குடோனில் ஒன்று உள்ளது. இந்த குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதியினர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
ஆனால் மளமளவென பரவிய தீ அருகே உள்ள குப்பை கிடங்குற்கு தீ பரவியது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பிளாஸ்டிக் குடோன் மற்றும் குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுகின்றது.