சென்னையில் பயங்கரம் ...! கத்திமுனையில் கூட்டு பலாத்காரம்.. காரில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்..!

சென்னையில் காருடன் பெண்ணை கடத்திச் சென்று, கத்தி முனையில் கூட்டு பலாத்காரம் செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் பயங்கரம் ...! கத்திமுனையில் கூட்டு பலாத்காரம்.. காரில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்..!
Published on

சென்னை

சென்னை அடுத்த போரூர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று முன் தினம் இரவு காரில் சென்று கொண்டிருந்தார். போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், அருகே சென்று கொண்டிருந்த போது காரை வழி மறித்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி டிரைவரை தாக்கி விரட்டி விட்டு காரில் அமர்ந்திருந்த பெண்ணை காரோடு கடத்தி சென்றனர்.

பின்னர் அங்கிருந்த காலி இடத்தில் வைத்து அந்த பெண்ணை கத்தி முனையில் கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணிடம் இருந்த 8 பவுன் நகையை பறித்து கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் பெண்ணை கத்தி முனையில் கூட்டு பலாத்காரம் செய்து நகை பறித்து சென்ற சம்பவத்தில் போலீசார் 6 பேரை போலீசார் கைது செய்தனர். கஞ்சா போதையில் அவர்கள் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com