மதுவுக்கு அடிமையாகி தொல்லை கொடுத்ததால் பயங்கரம்: கை, கால்களை கட்டி தூக்கி வந்து வாலிபரை கிணற்றில் வீசி கான்ற தந்தை -

மதுவுக்கு அடிமையாகி தொல்லை கொடுத்து வந்த மகனின் கை, கால்களை கட்டி தூக்கி வந்து, கிணற்றில் வீசி அவருடைய தந்தையே கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுவுக்கு அடிமையாகி தொல்லை கொடுத்ததால் பயங்கரம்: கை, கால்களை கட்டி தூக்கி வந்து வாலிபரை கிணற்றில் வீசி கான்ற தந்தை -
Published on

மேலூர்

மதுவுக்கு அடிமையாகி தொல்லை கொடுத்து வந்த மகனின் கை, கால்களை கட்டி தூக்கி வந்து, கிணற்றில் வீசி அவருடைய தந்தையே கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுவுக்கு அடிமை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொட்டக்குடியை சேர்ந்தவர் பெருமாள் என்ற ரவி (வயது 55), விவசாயி. இவருடைய மகன் சுப்பையா என்ற கண்டதேவன் (27). மது பழக்கத்துக்கு அடிமையான இவர், தினமும் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி பெற்றோருக்கு தொல்லைகள் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வெளியே சென்ற கண்டதேவன் வீடு திரும்பவில்லை.

நேற்று காலையில் ஊருக்கு வெளியே உள்ள ஒரு கிணற்றில் கண்டதேவன் பிணமாக கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் இது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி தமிழனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் மேலூர் போலீசில் புகார் அளித்தார்.

கிணற்றில் தள்ளி கொலை

போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி, தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தீயணைப்பு படையினரின் உதவியுடன் கண்டதேவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு சய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

மது போதைக்கு அடிமையான கண்டதேவனின் தொல்லை தாங்காமல் மனம் வெறுப்படைந்த அவருடைய தந்தை பெருமாளும், உறவினர் தங்கம் என்ற பொன்னையனும் (32) சேர்ந்து, மது போதையில் இருந்த கண்டதேவனை நற்று முன்தினம் இரவு கயிற்றால் கை, கால்களை கட்டி கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பெருமாள், பொன்னையன் ஆகியோரை மேலூர் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com