மலைப்பாதையில் கேட்ட பயங்கர சத்தம்: உலா வந்த ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சம்

மலைப்பாதையில் உலாவந்த ஒற்றையானை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு மளிகைகடையின் கதவை சேதப்படுத்தியது.
மலைப்பாதையில் கேட்ட பயங்கர சத்தம்:  உலா வந்த ஒற்றை யானையால் பொதுமக்கள் அச்சம்
Published on

பழனி,

பழனி அருகே மலையடிவாரத்தில் உள்ள அண்ணாநகர், தேக்கந்தோட்டம், புளியமரத்துசெட் பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றையானை வனத்தில் இருந்து வெளியேறி மலைப்பாதையில் உலா வருகிறது. அவ்வாறு வரும்போது சாலையின் நடுவில் நின்று வாகனங்களை மறித்துவிடுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதற்கிடையில் மலைப்பாதையில் உலாவந்த ஒற்றையானை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு மளிகைகடையின் கதவை சேதப்படுத்துகிறது. பின்பு சிறி துநேரம் அங்கேயே நின்று அதன்பிறகு சென்றுவிடுகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எனவே மலைப்பாதையில் உலா வரும் காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். அதற்கான தண்ணீர், இரை வசதியை செய்து கொடுக்க வேண்டும். அப்போது தான் அவை வனத்தில் இருந்து வருவது தடுக்கப்படும். இதற்கு சம்பந்தப் பட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com