நெல்லையில் பயங்கரம்: கல்லால் தாக்கப்பட்ட வாலிபர் பலி

கொலை முயற்சி வழக்கை, போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லையில் பயங்கரம்: கல்லால் தாக்கப்பட்ட வாலிபர் பலி
Published on: 

நெல்லை,

நெல்லை டவுனில் கல்லால் தாக்கப்பட்ட வாலிபர் இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தகராறு

நெல்லை டவுன் ஜாமியா பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது சலீம் மகன் அப்துல் அஜீஸ் (வயது 25). இவர் கடந்த மாதம் 31-ந்தேதி நெல்லை டவுன் கூலக்கடை பஜாரில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு அதன் அருகே உள்ள கடை முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு ஓட்டலுக்கு சாப்பிட வந்த 3 பேருக்கும், அப்துல் அஜீசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

சிகிச்சை

அவர்கள் 3 பேரும் சேர்ந்து அப்துல் அஜீசை தாக்கி, கீழே தள்ளிவிட்டு, கல்லால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

3 பேர் கைது

இதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அப்துல் அஜீசை தாக்கியது மகிழ்வண்ணபுரத்தை சேர்ந்த நாராயணன் பிரகாஷ் (23). வையாபுரிநகரை சேர்ந்த மகாராஜன் (26), காவல்பிறை தெருவை சேர்ந்த விக்னேஷ் (26) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த அப்துல் அஜீஸ் நேற்று மாலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X